இலங்கையில் ஒரு டொலருக்கு 240 ரூபா! அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

வெளிநாட்டு பணியாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற்காக ஒரு அமெரிக்க டொலருக்கு குறைந்தது 240 ரூபாவை செலுத்துவதற்கான யோசனையொன்று அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

இந்த விடயத்தை தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ், சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் வெளிநாட்டில் உள்ளவர்கள் இலங்கையில் உள்ள தங்களது குடும்பங்களுக்கு அதிக பணம் அனுப்புவது வழக்கம்.

எவ்வாறாயினும், இலங்கையில் நிலவும் தற்போதைய சூழலில் பல வெளிநாட்டு பணியாளர்கள் தமது பணத்தை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு அனுப்புகின்றனர்.

இந்த நிலைமை காரணமாக நாட்டின் வெளிநாட்டு நாணய கையிருப்பு பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தற்போது ஒரு அமெரிக்க டொலருக்கு 10 ரூபா ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

அதனை மேலும் 30 ரூபாவால் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இதன்படி அமெரிக்க டொலரொன்றுக்கு 240 ரூபா வழங்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

Tamilwin