பொறுப்புக்கூறலில் முன்னேற்றம் இல்லாமை மற்றும் பல மனித உரிமை வழக்குகளில் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளதற்கு பிரித்தானியா கவலை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தீர்மானம் 46/1 இல் உள்ள பரிந்துரைகளுடன் ஆக்கப்பூர்வமாக ஈடுபடுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு பிரித்தானியா அழைப்பு விடுத்துள்ளது.
ஐக்கிய இராச்சியத்தின் மனித உரிமைகளுக்கான உலகளாவிய தூதுவர் ரீட்டா பிரெஞ்ச் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக மனித உரிமைகளி கூட்டத் தொடரில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
அஹ்னாப் ஜஸீம் மற்றும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஆகியோர் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டதை வரவேற்பதாகக் குறிப்பிட்ட அவர், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஆரம்ப சீர்திருத்தங்களை நாங்கள் ஒப்புக்கொண்டாலும், இவை போதுமானதில்லை எனவும் கூறினார்.
பொறுப்புக்கூறலில் தொடர்ந்து முன்னேற்றம் இல்லாதது தொடர்பான கவலைகளைப் பகிர்ந்து கொள்வதுடன், பல மனித உரிமை வழக்குகளில் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளமையும் கவலையளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
அஹ்னாஃப் ஜஸீம் மற்றும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டதை ஒரு நேர்மறையான முதல் படியாக நாங்கள் வரவேற்கிறோம். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஆரம்ப சீர்திருத்தங்களை நாங்கள் ஒப்புக்கொண்டாலும், அவை போதுமான அளவு செல்லவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிவில் சமூகம் மீதான கண்காணிப்பு, துன்புறுத்தல் மற்றும் சிவில் அரசாங்க செயல்பாடுகளை இராணுவமயமாக்குதல் ஆகிய செயற்பாடுகள் கவலைகளை தந்துள்ளன.
நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் காணி அபகரிப்பு குற்றச்சாட்டுகளுடன் சிறுபான்மை சமூகங்கள் அதிகரித்த விளிம்புநிலையை எதிர்கொள்வதை நாங்கள் கவனிக்கிறோம். 46/1 தீர்மானத்தில் உள்ள பரிந்துரைகளுடன் ஆக்கப்பூர்வமாக ஈடுபடவும் இலங்கை அரசாங்கத்தை நாங்கள் அழைக்கிறோம்,” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Tamilwin