எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்க முடியாது என அகில இலங்கை வைத்திய உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருளுக்காக வரிசையில் காத்திருப்பது குறித்து இந்த சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
மருத்துவர்கள் அவசர அழைப்பு மற்றும் சாதாரண பணிகளுக்காக தங்களது சொந்த வாகனங்களை பயன்படுத்தி வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது.
வருடம் முழுவதும் 24 மணித்தியாலங்களும் கடமையில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருப்பது பொருத்தமற்றது எனவும், எரிபொருள் வழங்குவதில் மருத்துவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமெனவும் சங்கம் ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.
மருத்துவர்கள் தாமதமின்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சங்கம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரியுள்ளது.
Tamilwin