‘‘கனடாவின் வரலாற்றில் வீதியை முடக்கிய ஈழத்தமிழர்கள்! ஐ.நாவும் வரவில்லை’’

இறுதிக்கட்ட போரில் தனித்துவிடப்பட்ட தமிழர்களுக்காக கனடாவின் பிரதான சாலையை, கனடாவின் வரலாற்றில் முதன்முறையாக ஈழத்தமிழர்கள் சில மணி நேரம் முடக்கி போராடிய போதும் அவை தீர்மானங்களை நிறைவேற்ற போதுமானதாக அமையவில்லை என்று அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் கொழும்பில் உள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராத்தின் அரசியல் ஆலோசகர் பானு பிரகாஷ் முதன்மை அதிதியாக கலந்து கொண்டதுடன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இறுதிக்கட்ட போரில் தனித்துவிடப்பட்ட தமிழர்களுக்காக யாதும் ஊராக சென்ற போதும் யாவரும் கேளிர் என்று யாரும் ஏன் உதவவில்லை என தமிழ் மக்கள் தங்களை பார்த்து தாங்களே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும்.

புலம்பெயர் தமிழர்கள் தாங்கள் வாழும் பகுதிகளின் தெருக்களில் போராடினார்கள். இருப்பினும் உதவுவதற்கு நண்பர்கள் யாரும் இல்லை.

மேலும் தமிழ் மக்கள் சுமார் ஒரு நுற்றாண்டுக்கு மேலாக தோற்றுப்போய் கொண்டே உள்ளனர்.குறிப்பிட்டு சொல்லக்கூடிய வகையில் கடந்த 12 வருடங்களாக தமிழ் மக்கள் எந்த வெற்றியையும் பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

 

 

Tamilwin