இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான கட்டுப்பாடு பிழையான தீர்மானம்

இறக்குமதி செய்பய்படும் பொருட்களுக்கான கட்டுப்பாடு ஓர் பிழையான தீர்மானம் என முன்னிலை சோசலிச கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

டொலர் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அரசாங்கம் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது.

எனினும், இந்த தீர்மானத்தின் மூலம் டொலர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட முடியாது என கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.

மொத்த இறக்குமதியில் நுகர்வுப் பொருட்களுக்காக மொத்தமாக 22 வீதமாகும் எனவும் இதில் உணவுப் பொருட்களின் பங்களிப்பு வெறும் 7 வீதமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் மொத்த இறக்குமதி செலவில் 78 வீதமான செலவுகளை எம்மால் கட்டுப்படுத்த முடியாதவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்தின் இறக்குமதி பொருள் கட்டுப்பாட்டினால் பெரும் எண்ணிக்கையிலானவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tamilwin