அரசாங்கம் செலவுகளை குறைக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
அரசாங்க செலவுகள் குறைக்கப்பட வேண்டும். அண்மையில் இரண்டு அரசாங்க அமைச்சர்கள் பதவி நீக்கப்பட்டனர். உடனடியாக அவர்களுக்கு பதிலாக வேறும் நபர்கள் நியமிக்கப்பட்டனர்.
தேசிய அரசாங்கம் பற்றி தற்பொழுது பேசப்படுகின்றது. தேசிய அரசாங்கம் அல்ல வேறு எது வந்தாலும் முதலில் அரசாங்க செலவுகள் குறைக்கப்பட வேண்டும். அதற்கு அமைச்சர்களின் எண்ணிக்கை குறைப்பு மிகவும் அவசியமானது.
ஒரு அமைச்சுக்கு மூன்று ராஜாங்க அமைச்சுக்கள் சிலவற்றில் நான்கு பேர் ராஜாங்க அமைச்சர்கள். இவர்கள் கயிறு இழுக்கின்றனர்.
ஒருவரை ஒருவர் வேலை செய்ய விடுவதில்லை. விரிவான அரசியல் கூட்டணி ஒன்று உருவாக்கப்படும். இதில் யார் தலைவர், யார் ஜனாதிபதி வேட்பாளர் என்பது பற்றி பேசப்படாது என மைத்திரி தெரிவித்துள்ளார்.
Tamilwin