இலங்கை மக்கள் வீதியில்: இதுவே இந்த அரசாங்கம் நாட்டு மக்களுக்கு கொடுத்த புத்தாண்டு பரிசு – இராதாகிருஷ்ணன் எம்.பி

புத்தாண்டைக் கொண்டாட வேண்டிய பொதுமக்கள் இன்று வீதி ஓரங்களில் அத்தியாவசிய பொருட்களுக்காக வரிசையில் நிற்கின்ற நிலையும், போராட்டங்களில் ஈடுபடுகின்ற சூழ்நிலையும் ஏற்பட்டிருக்கின்றது. இதுவே இந்த அரசாங்கம் இந்த நாட்டு மக்களுக்குக் கொடுத்த புத்தாண்டு பரிசாகும் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையினுடைய பொருளாதார பின்னடைவுக்கு முக்கிய காரணம் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக எதிர்க்கட்சிகள் கூறிய விடயங்களைப் பொருட்படுத்தாமல் தன்னிச்சையாகச் செயல்பட்டமையே. நாங்கள் தொடர்ச்சியாகச் சர்வதேச நாணய நிதியத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினோம்.

மீள் செலுத்த வேண்டிய கடன்களைச் செலுத்துவதை நிறுத்திச் சம்மந்தப்பட்டவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி காலத்தை நீட்டிக்குமாறு கோரிக்கை முன்வைத்தோம். ஆனால் இந்த எந்தவொரு கருத்தையும் ஏற்றுக்கொள்ளாத அரசாங்கமும், அதிகாரிகளும் செயல்பட்டதன் காரணமாக அதன் விளைவை இன்று மக்கள் எதிர்நோக்கியிருக்கிறார்கள்.

 

 

Tamilwin