பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையை இந்தியா மீட்கும்!

வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இந்தியா எப்போதும் தமிழ் மக்களுக்காக துணை நிற்கும் என பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அதேநேரம் பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையை இந்தியா மீட்க்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார். இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவருடன், யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோரும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

இவர்கள் இன்று காலை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து நல்லை ஆதீன குரு முதல்வரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். அத்துடன் இந்திய அரசின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் கலாச்சார மத்திய நிலையத்தையும் இவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

இதன்போது கலாச்சார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள விசேட வசதிகள் தொடர்பாகவும் அதன் திறன்கள் தொடர்பாகவும் யாழ் இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் விளக்கமளித்துள்ளார்.

இதனையடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலைக்கும் இடையில் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதி ஒன்றில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கூறினார்.

 

 

IBC Tamil