பொருளாதார மறுமலர்ச்சித் திட்டத்தை தயாரிக்க தயார் – ஹர்ஷ டி சில்வா

நாடாளுமன்றத்தில் பொது நிதிக் குழுவின் தலைவராக இருக்கவும், பெரும்பான்மையால் அங்கீகரிக்கப்பட்ட நாடாளுமன்ற முன்மொழிவான “அனைத்துக் கட்சி பொருளாதார மறுமலர்ச்சித் திட்டத்தை” தயாரிப்பதற்கு தலைமைத்துவத்தை வழங்கவும் தயாராக உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில் “பல பொது நிதிக் குழு என்பது நாடாளுமன்றத்தில் மிகவும் சக்திவாய்ந்ததாகும்.

இது அரசியலமைப்பு விதி 148 ஐ நிறைவேற்றுவதற்கான பரந்த அதிகாரங்களைக் கொண்டுள்ளது, இது பொது நிதியின் ‘முழுக் கட்டுப்பாட்டை’ வழங்குகிறது.

சட்டப்பூர்வமற்ற அரசாங்கத்தை விட, இங்கு என்னால் ஒரு பெரிய பாத்திரத்தை வகிக்க முடியும் என தான் உணர்வதாக அவர் கூறியுள்ளார்.

 

 

IBC Tamil