கோவிட்19 சார்ந்த சொக்சோவின் அணுகுமுறை தொழிலாளிகளை முதுகில் குத்தும்

மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (The Malaysian Trade Union Congress) கோவிட் -19 தொடர்பான நிவாரண விண்ணப்பம் ‘வேலையில் பாதிப்பு’ என்பதை  ‘தொழில் ரீதியான பாதிப்பு’  என்று  சமூக பாதுகாப்பு அமைப்புக்கு(Socso)  மாற்றியது ஒரு பின்னடைவு என்று சாடுகிறது. .

பிரதம மந்திரி இஸ்மாயில் சப்ரி யாகோப்பின் தலையீட்டை வலியுறுத்துகையில், MTUC பொதுச் செயலாளர் காமருல் பஹரின் மன்சூர்(Kamarul Baharin Mansor) ஒரு அறிக்கையில், சோக்சோவின் நிர்வாகம் தொழிலாளர்களின் நலன்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாத ஒரு “பிற்போக்குத்தனமான நடவடிக்கையை” மேற்கொண்டுள்ளது என்று கூறினார்.

“கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் தேவைகளைப் புரிந்து கொள்ளாத, Socso நிர்வாகத்தின் நடவடிக்கையை MTUC கண்டிக்கிறது.”

” Socso நிர்வாகம், தொழிலாளர்களுக்கு, குறிப்பாக கீழ்மட்ட ஊழியர்களுக்குச் சுமையாக இருக்கும் அத்தகைய முடிவை எடுப்பதற்கு முன், அவர்களின் கருத்துக்களைப் பெற்றிருக்க வேண்டும்”.

“இந்த கூற்று, கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட போது தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சுமைகளை விடுவிக்க உதவியது,” என்று அவர் மேலும் கூறினார்.

MTUC பொதுச் செயலாளர் கமருல் பஹாரின் மன்சோர்

கோவிட்-19 தொடர்பான உரிமைகோரல்களை ஒரு தொழில்சார் நோயாகச் செயலாக்குவது என்பது சுகாதாரப் பணியாளர்களிடையே நோய்த்தொற்றின் முன்னிலையில் இருக்கும் வேலைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு  மட்டுமே நிவாரணம்  விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

மேலும், கமருல் பஹாரின், Socso நிதியானது அதன் நிர்வாகத்தை விட பங்களிப்பாளர்களாக இருக்கும் தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் நோக்கம் கொண்டது என்பதை நினைவுபடுத்தினார்

தொழிலாளர்களின் பங்களிப்புகள் அவர்களின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்ற தொழிலாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்க ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மலேசியா ஒரு சுமூக கட்டத்திற்கு மாறுவதில், கோவிட் -19 தொடர்பான அனைத்து நிவாரணமும் ஏப்ரல் 1 முதல் ஒரு “வேலை நோய்க்கான” நிவரணமாக செயலாக்கப்படும் என்று சோக்சோ முன்பு கூறியது.

மார்ச் 26 ஆம் தேதி வரை, உள்ளூர் மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை உள்ளடக்கிய மொத்தம் 132,988 கோவிட்-19 சார்ந்த நிவாரண விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும் Socso அறிவித்தது.

இந்த தொகையில், ரிம133 மில்லியனுக்கும் அதிகமான தொகை கடந்த ஆண்டு பிப்ரவரி 24  முதல்  காப்பீட்டு நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.