மார்ச் மாதத்தில் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் 55 வீதத்தால் கணிசமான அளவு வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2022 பெப்ரவரியில் 205 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த இலங்கைக்கான பணம் அனுப்பும் வருமானம் மார்ச் 2022 இல் 318 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்து 113 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கடந்த ஆண்டு (2021) மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது, பணம் அனுப்பும் வரவுகள் 48 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்ட மார்ச் மாதம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பணம் 612 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilwin