பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கிடைக்கவுள்ளது. பெட்ரோல், டீசல் என அனைத்துக்கும் பற்றாக்குறை நிலவும் நிலையில், அதிலிருந்து எரிபொருள் தயாரிக்க உள்ளது இலங்கை.
சைபீரியன் லைட் எனும் ரஷ்ய தர எண்ணெய் இலங்கையின் சப்புகஸ்கந்தவில் உள்ள சிலோன் பெட்ரோலிய நிலையத்தில் சுத்திகரிப்பு செய்யப்படும் என்று அதன் தலைவர் சுமித் விஜேசிங்க சொன்னார்.
கச்சா எண்ணெய் இன்று இலங்கையை சென்று சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, இரண்டு மாதங்களாக மூடிக்கிடந்த சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கவுள்ளது.
உக்ரேன் மீதான படையெடுப்பிற்குப் பிறகு ரஷ்யாமீது மேற்கத்திய நாடுகள் தடை விதித்தன. இதனால், அமெரிக்க, சில ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டன. இதனால், ரஷ்யாவின் எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்தது. அதைப் பயன்படுத்தி, ஆசிய நாடுகளான சீனா, இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கத் தொடங்கின. அந்தப் பட்டியலில் தற்போது இணைந்துள்ளது இலங்கை. ஆனால், இதற்கான தொகையை இலங்கை எப்படி செலுத்தப் போகிறது என்பது தெளிவாக தெரியவில்லை.
சுத்திகரிப்பு நிலையம் ஆறு நாள்களில் எரிபொருளை உற்பத்தி செய்யும் என்றார் அமைச்சர் காஞ்சனா விஜயசேகரா.
Tamilmurasu