நிபந்தனை அடிப்படையில் இலங்கைக்கு உதவுமாறு சர்வதேச நாணய நிதியத்திற்கு அமெரிக்கா சுட்டிக்காட்டு

நிபந்தனை அடிப்படையில் மட்டுமே இலங்கைக்கு, சர்வதேச நாணயம் நிதியம் உதவ வேண்டுமென அமெரிக்க செனட் சபையின் வெளியுறவுக் கமிட்டி சுட்டிக்காட்டியுள்ளது.

மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மை, ஊழல் ஒழிப்பு மற்றும் சட்டத்தை நிலைநாட்டுதல் ஆகிய நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே இலங்கைக்கு உதவ வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

நிபந்தனைகள் விதிக்காது இலங்கைக்கு உதவினால் கட்டுப்பாடு இன்றி கடன் சுமையினாலும், பலவீனமான பொருளாதார முகாமைத்துவத்தினாலும் நாடு மேலும் மோசமான விளைவுகளை எதிர்நோக்கும் என சுட்டிக்காட்டியுள்ளது.

 

 

Tamilwin