இலங்கை போர்க்குற்றம்: இந்திய நாடாளுமன்றத்தை முற்றுகையிடத் திட்டம்

இலங்கைத் தமிழினப் படுகொலைக்கு கராணமான அனைவர் மீதும் அனைத்துலக நீதிமன்றத்தில் போர்க் குற்ற விசாரணை நடத்தக்கோரி வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று புதுடெல்லியில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 26ம் திகதி புதுடெல்லியில் இந்திய நாடாளுமன்றம் நோக்கி இந்த ஆர்பாட்டப் பேரணி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரணியில் பங்கேற்க புதுடெல்லி செல்லவுள்ள தமிழ்நாட்டு இளைஞர்களை இந்திய நேரப்படி இன்று (24.08.2011) மாலை 5 மணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் தா.பாண்டியன், பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் வழியனுப்பி வைக்கிறார்கள் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.