முஹைடின் கருத்து நாட்டை நாசப்படுத்தும் – ஜஹிட் ஹமிடி

முன்னாள் பிரதமரான முஹிடினின் நாட்டை நாசப்படுத்தும் வேலையில் ஈடுபட்டு உள்ளார் என்று குற்றம்சாட்டியுள்ளார் தேசிய முன்னணியின் தலைவர் ஜஹிட் ஹமிடி.

முஹிடின் கருத்துக்கள் பிரதமரின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக அமையும் என்றும் கடுமையாக சாடியுள்ளார்.

”இதுபோல் அரசாங்கத்தை குறை கூறினார் நாட்டின் மீது நம்பிக்கை வைத்து முதலீட்டாளர்கள் எப்படி நாட்டுக்குள் தங்களின் ஈடுபாட்டை காட்டுவார்கள் என்றும்முஹிடின் இப்படி செய்வது நாட்டுக்கு எதிரான ஒரு நாசவேலை என்றும் சாடினார்.

முஹிடினின் கருத்துப்படி பிரதமரின் ஆட்சி அடித்தளம் ஆட்டம் கண்டு வருவது போல் ஒரு மாயையை உருவாக்கி உள்ளது என்றும் சாடியுள்ளார். இதுபோல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால் அரசாங்கம் எப்படி ஒரு குழுவாக செயல்படும் என்ற வினாவையும் எழுப்பியுள்ளார்.

இதற்கு முன்பு முஹுடின், நாட்டின் சரியும் நாணய மதிப்பும், அதிகரிக்கும் விலைவாசியும் இஸ்மைல் சப்ரியியால் சாமாளிக்க இயலவில்லை என்ற வகையில் விமர்சித்திருந்தார்.