இலங்கை: அரசாங்க எதிர்ப்புப் பேரணியைக் காவல்துறை தடுத்தது

இலங்கையில் நடத்தப்பட்ட அரசாங்க எதிர்ப்புப் பேரணியை காவல்துறையினர் தடுத்துள்ளனர்.

தலைநகர் கொழும்பின் முக்கிய ரயில் நிலையத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் அணிவகுத்துச் சென்றனர்.

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் போராட்டக்குழுத் தலைவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். 2 மாதங்களுக்கு மேலாக சிறையில் இருக்கும் அந்த இருவரையும் விடுதலை செய்யவேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் வலியுறுத்தினர்.

போராட்டங்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இலங்கை வரலாறு காணாத பொருளியல் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சூழலில் வரும் 14ஆம் தேதி அதிபர் ரணில் விக்ரமசிங்க முதல் வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்கவிருக்கிறார்.

வரிகளைக் கடுமையாக உயர்த்த அவர் திட்டமிடுவதாகத் தெரிகிறது. அதனால் மக்களின் அதிருப்தி மேலும் அதிகரிக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

 

 

-smc