பிரிட்டிஷ் நிதியமைச்சர் ஜெரமி ஹன்ட் (Jeremy Hunt) அடுத்த வாரம் வரவுசெலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்கும்போது வரிகளை உயர்த்தவிருப்பதாகக் கூறியுள்ளார்.
பொது நிதியைப் பெருக்கவும், உத்தேசப் பொருளியல் மந்தநிலையைச் சமாளிக்கவும் அத்தகைய நடவடிக்கை அவசியம் என்று கருதப்படுகிறது. பிரிட்டிஷ் பிரதமராகத் திரு. ரிஷி சுனாக் (Rishi Sunak) பொறுப்பேற்ற பிறகு முதல் வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படவுள்ளது.
முதலீட்டாளர்களிடையே பிரிட்டன்மீது நம்பிக்கையைக் கொண்டுவரத் திரு. ஹன்ட் முயற்சி செய்கிறார்.
வரிகளை உயர்த்தப்போகும் அவருடைய திட்டம் கன்சர்வேட்டிவ் கட்சியில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தலாம் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
-smc