புத்துயிர் பெறும் முள்ளிவாய்க்கால்.! மாவீரர் வாரம் ஆரம்பம்

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடி உயிர்நீத்த மாவீரர்களை நினைவுக்கூறும் வாரம் நாளையுடன் ஆரம்பமாகும் நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

இதன்படி இறுதி யுத்தத்தில் மாறாத வடுவாக பதிவாகிய முள்ளிவாய்க்காலில் இன்று சிரதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் இன்று முள்ளிவாய்க்கால் பிரதேச மக்களால் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது.

எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற உள்ளன.

அதற்கான தயார்ப்படுத்தலில் பிரதேச மக்கள் ஈடுபட்டு வரும் நிலையில், முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் கிராமம் மக்களால் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது.

பெற்றோர்கள் கௌரவிப்பு

அதேவேளை கிளிநொச்சி மருதநகர் பகுதியில் மாவீரரின் பெற்றோர் மற்றும் உறவினர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி மருதநகரில் ஏற்பாட்டு குழுவினரால் மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டனர். இதன்பொது மாவீரர்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவீரர்களின் பெற்றோருக்கு தென்னை மரக்கன்றுகளும் வழங்கப்பட்டிருந்தன.

இந்த நிகழ்வில் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேலமாலிகிதன் மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மேலும், கிளிநொச்சி வட்டக்கச்சி சந்தையடிப் பகுதியில் அமைக்கப்பட்ட மண்டபத்தில் வட்டக்கச்சி ஏற்பாட்டு குழுவினரால் மாவீரன் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேலமாலிதன் அவர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

 

 

-ibc