அடுத்த மாதம் முதல் புதிய வரி நடைமுறை! மாதாந்தம் 70,500 ரூபாய் வரி

திருத்தப்பட்ட உள்நாட்டு இறைவரிச் சட்டமூலம் தொடர்பில் தற்போது பல்வேறு விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.

ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேல் மாத வருமானம் பெறும் அனைவரும் வருமான வரிக்கு உட்பட்டிருப்பதே அதற்குக் காரணமாகும்.

இதுவரை, 250,000 ரூபாய் மாத வருமானம் பெற்றவர்கள் வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, அதற்கு மேல் வருமானம் ஈட்டும் ஒவ்வொரு நபரும் வருமான வரிக்கு உட்பட்டனர்.

இந்த ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அமல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த வரிக்கு ஏற்பட்ட சட்டச் சிக்கல்கள் காரணமாக, டிசம்பர் மாதம் வரை அமல்படுத்துவது ஒத்திவைக்கப்பட்டது.

திருத்தப்பட்ட உள்நாட்டு வருமான சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, 06 வகைகளின் கீழ் வரிகள் அறவிடப்படவுள்ளதுடன் வருமானத்திற்கு ஏற்ப 06, 12, 18, 24, 30, 36 வீதங்களில் வரி வீதங்கள் அதிகரிக்கப்படவுள்ளன.

எனினும் மாத வருமானமாக 100,000 வரை பெறும் மக்களுக்கு இந்த வரி பாதிக்காதென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒருவர் தனது மாதாந்த வருமானமாக 400,000 ரூபாவை பெற்றால், அதற்கு வரியாக மாதாந்தம் 70,500 ரூபாய் அறவிடப்படும்.

மொத்த சம்பளத்தில் 18 வீதத்தை அந்த நபர் வரியாக செலுத்த வேண்டும்.

 

 

 

-tw