தேர்தலில் தனித்து போட்டியிட கூட்டமைப்பின் உறுப்பு கட்சிகள் தீர்மானம்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்புக் கட்சிகள் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளன.

இந்தத் தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் இல்லத்தில் நடைபெற்ற கூட்டமைப்பின் மத்திய குழுக் கூட்டத்தில்.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் தனித்துப் போட்டியிடத் தீர்மானித்துள்ளதுடன், தனித்து போட்டியிடுவதா அல்லது ஏனைய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதா என்பது தொடர்பில் அக்கட்சிகள் சுயேச்சையான தீர்மானங்களை மேற்கொள்ளும் திறன் கொண்டவை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தேர்தலின் பின்னர் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை ஸ்தாபிப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கு கூட்டமைப்பின் கட்சிகளின் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இலங்கை தமிழ் அரசு கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, டெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் கட்சியின் தலைவர் சித்தார்த்தன் தர்மலிங்கம் மற்றும் எம். ஏ சுமந்திரன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

 

-ift