உரம் வித்து அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கும் அரசாங்கம்

யூரியா உரத்தை விற்பனை செய்து கிடைத்த பணத்தில் கடந்த டிசம்பர் மாதம் அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் சம்பளம் வழங்கியதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்று (10) விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனை வெளிப்படுத்தினார்.

அரச ஊழியர்களுக்கு சம்பளம்

உரங்களை விற்பனை செய்ததன் மூலம் விவசாய அபிவிருத்தி திணைக்களம் கடந்த ஆண்டு சிறு போகத்தில் மற்றும் இவ்வருட பெரும் போகத்தில் 10.05 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது.

அப் பணம் திறைச்சேரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் கடந்த டிசம்பர் மாதத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளத்தை வழங்குவதற்காக அதன் ஒரு பகுதியை பயன்படுத்த அரசாங்கத்திற்கு வேண்டியிருந்ததாக அவர் தெரிவித்தார்.

மேலும், அடுத்த வார இறுதிக்குள் சில பிரதேசங்களில் இந்த வருட நெல் அறுவடை ஆரம்பிக்கப்படவுள்ளதால், அரிசியை கொள்வனவு செய்வதற்கு அரிசி சந்தைப்படுத்தல் சபைக்கு குறைந்தது 10 பில்லியன் ரூபாய் தேவைப்படும் எனவும் அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

 

 

-jvp