இலங்கை அரசாங்கத்தின் மொத்தக் கடன் தொகை 25 ட்ரில்லியன் ரூபாவை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட புதிய அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக அரசாங்கத்தின் மொத்த கடன் தொகை 25 ட்ரில்லியன் ரூபாவை கடந்துள்ளதாகவும், உள்நாட்டு கடன் தொகை அதிகரிப்பு காரணமாக அரசாங்கத்தின் மொத்த கடன் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
-if