இலங்கை அரசின் தன்னிச்சையான செயல்பாடுகளுக்கு எதிராக இன்று கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி

இலங்கை அரசாங்கத்தின் தன்னிச்சையான வரி அதிகரிப்பு, மருந்து பற்றாக்குறை தொடர்பில் நாடு முழுவதும் பல எதிர்ப்புகள் வலுப்பெற்றுள்ளன.

அந்தவகையில், பல தொழிற்சங்கங்கள் இணைந்து இலங்கை அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக இன்றைய தினம் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளன.

குறித்த விடயத்தை, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

போராட்டம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பல தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து குறித்த போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

காவல்துறையின் அறிவித்தல்

இதேவேளை, குறித்த ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பில் சில வீதிகள் மூடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக கொழும்பு – லோட்டஸ் சுற்றுவட்டம் உள்ளிட்ட வீதிகள் மூடப்பட்டுள்ளதாகவும், இதன்காரணமாக சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

 

-ibc