இலங்கை வான்பரப்பின் வழியே செல்லும் விமானங்களுக்கான கட்டணம் அதிகரிப்பு

இலங்கை வான்பரப்பின் ஊடாக பறக்கும் சர்வதேச விமானங்களுக்கு விதிக்கப்படும் விமானப் போக்குவரத்துக் கட்டணத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய, பெப்ரவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்தக் கட்டணங்கள் திருத்தப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

விமான நிலையம் மற்றும் ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் இந்தக் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

1985ஆம் ஆண்டு முதல் இந்தக் கட்டணங்கள் திருத்தப்படவில்லை எனவும் தற்போது அது திருத்தம் செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

-tw