இலங்கையில் இறக்குமதி கட்டுப்பாடுகள் – அரசாங்கத்தின் தீர்மானம்

இலங்கையில் இறக்குமதி தடை செய்யப்பட்ட 1,465 பொருட்களில் 780 பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.

இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பொருட்கள் தொடர்பில் எதிர்காலத்தில் மீளாய்வு நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் தொடர்பாக எடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும் மிகவும் கவனமாக எடுக்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், வருவாய் நிர்வாக முகாமைத்துவ தகவல் அமைப்பு அல்லது ‘RAMIS அமைப்பை வினைத்திறன் மிக்கதாக மாற்ற இரண்டு துணைக் குழுக்களை நிறுவ அரசு கணக்குகள் குழுவில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பில் 10 பில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ள போதிலும் அது முறையாகச் செயற்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.

 

 

-if