அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவுள்ள ரணில் விக்கிரமசிங்க

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சி அல்லது கூட்டணியில் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் வெற்றி

மேலும் கூறுகையில்,“2024 ஜனாதிபதி தேர்தலில் ரணில் போட்டியிட்டு வெற்றி பெற்று 2030 வரை அவர் ஜனாதிபதியாக நீடிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

ஜனாதிபதி தனது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிடுவார்.

இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பார்கள்.”என கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு பதவிவிலகிய கோட்டாபய ராஜபக்சவின் எஞ்சிய ஜனாதிபதி பதவிக் காலத்தை ரணில் விக்ரமசிங்க தற்போது வகித்து வரும் நிலையிலேயே இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

 

-tw