பயங்கரவாத தடை சட்டத்திற்கு பதிலாக தேசிய பாதுகாப்புச் சட்டம் – ஜெனீவாவில் எடுத்துறைத்தார் அலிசப்ரி!

பயங்கரவாத தடை சட்டத்திற்கு பதிலாக தேசிய பாதுகாப்புச் சட்டம் : ஜெனீவாவில் எடுத்துறைத்தார் அலிசப்ரி!

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை உருவாக்கும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தில் இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 42ஆவது அமர்வில் இலங்கை தொடர்பான உலகளாவிய காலமுறை மீளாய்வு அறிக்கையை சமர்ப்பிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தொடர்பான மனித உரிமை அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவித்த பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கு இலங்கை செயற்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளனர்.

 

 

-if