பிரபாகரன் ஆயுதம் ஏந்தி கேட்டவற்றை பேனாவினால் வழங்க முடியாது – சரத் வீரசேகர!

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தக் கூடாது என சிங்கள அரசியல் வாதிகள் தெரிவித்து வருகின்ற நிலையில், பிரபாகரன் ஆயுதம் ஏந்தி கேட்டவற்றை பேனாவினால் வழங்க இடமளிக்க முடியாது என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கடும் அழுத்தத்தினால் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கிறார் என்றும் குற்றம் சாட்டினார்.

நெருக்கடிக்கு மத்தியில் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக குறிப்பிட்டு நாட்டில் பிரச்சினைகளை தோற்றுவிக்க வேண்டாம் என மகாசங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

மகாசங்கத்தினரின் ஆலோசனைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மதிப்பளித்து செயற்படுவார் என எதிர்பார்ப்பதாகவும் சரத் வீரசேகர தெரிவித்தார்.

13 ஆவது திருத்தம் இந்தியாவினால் பலவந்தமாக இலங்கைக்கு அமுல்படுத்தப்பட்டது என்றும் இதன் பின்னர் ஏற்படுத்தப்பட்ட சில பாதுகாப்பு வழிமுறையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தகர்க்க முயற்சிக்கிறார் என்றும் குற்றம் சாட்டினார்.

 

 

 

-if