இத்தாலி உள்ளூராட்சி தேர்தலில் களமிறங்கும் இலங்கை பெண்

இத்தாலியில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் லோம்பார்டிசா மாகாணத்தில் போட்டியிடுவதற்காக இலங்கைப் பெண்ணான தம்மிகா சந்திரசேகரா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவர் இத்தாலியின் லோம்பார்டி மாகாணத்தில் புலம்பெயர்ந்த சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக பிராட்டிட்டோ ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் எமா மாகாணத்தில் வசிக்கும் வெளிநாட்டினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே வேட்பாளராவார்.

குடும்ப பின்னணி

57 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான தம்மிகா கந்தானையில் பிறந்து கந்தானை புனித செபஸ்தியன் கல்லூரியிலும் கந்தானை மசினோட் கல்லூரியிலும் கல்வி கற்று 1984 இல் இத்தாலிக்குச் சென்றார்.

2018 ஆம் ஆண்டில், சம்புது சாசனத்திற்கான தனது சேவைக்காக அனுராதபுரம் தொழிற்பயிற்சி நிலையத்தின் டிப்ளோமா விழாவில் தம்மிகா ‘சாதுஜன பிரசாதனி திரிய மாதா’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

 

 

-tw