கழிவுகளால் திணறும் இலங்கையின் முக்கிய நகரம்

இரத்தினபுரி நகரப்பிரதேசங்களில் கொட்டிக்கிடக்கும் கழிவுகளால் நீர்நிலைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாடிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வீடுகள், வியாபார நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்படும் மலசலகூட கழிவுகள் பிரதேச நீர்நிலைகளுக்கு விடப்படுவதாக பிரதேசவாசிகள் முறையிடுகின்றனர்.

மலசலகூட பிரச்சினை

இப்பிரதேசத்தில் பெரும்பாலானவர்களுக்கு மலசலகூட வசதி இருந்தும் அவை நிறைந்த பின்னர் அவற்றை முறையாக நீக்காது இந்நீர்நிலைகளுக்குத் திறந்து விடுவதால் பெரும் சுகாதார அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.

அதோடு பெரும்பாலானவர்கள் மலசல கூட கழிவுகளை களுகங்கைக்கு திருப்பி விடுவ தாலும் இந்நிலைமை உருவாகி வருவதாக கவலை தெரிவிக்கப்படுகிறது.

எனவே அரச அதிகாரிகள் மேற்படி மலசலகூட பிரச்சினைகளை இனங்கண்டு கழிவுகளை அகற்றுவதற்கான வழிமுறைகளை ஒழுங்கு படுத்திக் கொடுக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் சட்டதிட்டங்களை மீறும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதேச மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

 

-jv