தவறை திருத்த சந்தர்ப்பம் அளியுங்கள் – மக்களிடம் பசில் கோரிக்கை

இழைக்கப்பட்ட தவறுகளை புரிந்து கொண்டு அவற்றை தீர்க்க ஒரு சந்தர்ப்பம் வழங்குங்கள் என பசில் ராஜபக்ச மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கெழும்பில் ஊடகமொன்றின் நேர்காணலில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தவறுகளை சரிசெய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்

எனவே, சில தவறான முடிவுகள் எடுக்கப்பட்டதால், பொதுமக்கள் கவனமாக சிந்திக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பிழைகள் எங்களிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. பிழைகளைத் தேடினோம். அந்த தவறுகளை சரிசெய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் எனத் தெரிவித்தார்.

 

-ib