இலங்கையில் புதிய உச்சத்தை எட்டியுள்ள மின்சாரக் கட்டணம்

இலங்கையில் மின்சாரக் கட்டணங்கள் புதிய உச்சத்தை எட்டியுள்ளன.

ஏற்கனவே கடந்த ஆண்டு 75 விழுக்காடு கூடியிருந்த கட்டணம், இன்னும் 66 விழுக்காடு அதிகரித்துள்ளது.

பொருளியலைக் கைதூக்கி விட அனைத்துலகப் பணநிதியத்திற்கு இது தூண்டுதல் அளிக்கும் என்று இலங்கை அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது. அரசாங்க மானியங்கள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதை அது சுட்டியது.

நீண்டகால எரிபொருள் ஒப்பந்தங்களைத் திறம்படக் கையாளவும் அது உதவும் என்று இலங்கை தெரிவித்தது.

ஆனால், உள்ளூர்வாசிகள், மின்சாரக் கட்டணங்களைத் தங்களால் செலுத்த இயலாது என்று கூறுகின்றனர். இலங்கையில் பணவீக்கம் ஆண்டு அடிப்படையில் 54 விழுக்காடு அதிகரித்துள்ளது. வருமான வரி விகிதம் 36 விழுக்காடாக உள்ளது.

கடந்த ஆண்டு அனைத்துலகப் பணநிதியம் இலங்கைக்கு 2.9 பில்லியன் டாலர் கொடுத்து உதவ ஒப்புக்கொண்டது. அதற்கு இலங்கை அதன் வரிகளை உயர்த்தி, நிதியுதவியை அகற்றி, பொதுத்துறைக் கடனைக் குறைக்கவேண்டும் என்று பணநிதியம் நிபந்தனை விதித்தது.

 

 

-sm