நாட்டின் பொருளாதார மீட்சிக்கு முன்னுரிமை – ஜனாதிபதி உறுதி

நாட்டின் பொருளாதார மீட்சிக்கு முன்னுரிமை அளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

அத்துடன் அராஜகத்தை தடுக்கும் வகையில் சட்டம் மற்றும் ஒழுங்கு பேணப்படுவதை ஜனாதிபதி உறுதிப்படுத்துவதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருட இறுதிக்குள் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுத்து செயற்படும் ஜனநாயக சமூகத்தை ஸ்தாபிக்கப்படும் என்று கொழும்பில் இடம்பெற்ற மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பொருளாதார மீட்சி

பொருளாதார மீட்சி மற்றும் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

ஜனநாயகம் என்பது சட்டம் மற்றும் ஒழுங்கு தேவைப்படும் பொது ஒழுங்கைப் பேணுவதில் தங்கியுள்ளது. இந்த அத்தியாவசிய கூறுகள் இல்லாமல், ஜனநாயகம் அராஜகத்தால் மாற்றப்படும் சூழ்நிலை ஏற்படாமல் இருக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யப்போவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டின் பொருளாதார மீட்சியைத் தொடர்ந்து அடுத்த வருடம், எதிர்காலத்தை வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்கும் நிலை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

-tw