தேர்தலை புறக்கணிப்பது இலங்கை மக்களின் இறையாண்மையை அச்சுறுத்தலுக்குள்ளாக்கும்

எதிர்வரும் மார்ச் மாதம் 19 ஆம் திகதிக்கு முன்னர் நடாத்தப்படவேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களைப் பிற்போடுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது.

அதேவேளை இலங்கையின் ஜனநாயக செயன்முறையில் அனைத்துத் தேர்தல்களும் இன்றியமையாதவையாகும் என்று சுட்டிக்காட்டியுள்ள அச்சங்கம், அதில் எவ்வித இடையூறுகளும் ஏற்படுத்தப்படக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது.

திறைசேரியின் செயலாளர், அரச அச்சகக்கூட்டுத்தாபனம் மற்றும் ஏனைய அரசாங்க அதிகாரிகளின் கடந்த சில வாரகால செயற்பாடுகள் தேர்தலை நிறுத்துவதை இலக்காகக்கொண்ட முயற்சிகளேயாகும்  சுட்டிக்காட்டியுள்ள சட்டத்தரணிகள் சங்கம்,  அவை இலங்கை மக்களின் உரிமையைப் புறக்கணிப்பதுடன் மக்களின் இறையாண்மையை அச்சுறுத்தலுக்குள்ளாக்கும் வகையிலும் அமைந்திருக்கின்றன எனவும் தெரிவித்துள்ளது.

 

 

-if