கோட்டாபயவை போன்று ரணில் இடமிருந்தும் ஆட்சி பறிக்கப்படும்

தேர்தலை நடத்துவதா இல்லையா? அதற்கு நிதியை வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் உரிமை ரணில் விக்ரமசிங்கவிற்கு கிடையாது.

தேர்தலைக் காலம் தாழ்த்துவதற்காக அவர் தற்போது முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு எதிர்காலத்தில் நிச்சயம் பொறுப்பு கூற வேண்டியேற்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

அதே போன்று விரைவில் மீண்டுமொரு புரட்சி ஏற்பட்டு அதன் மூலம் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை போன்றே, ரணில் விக்ரமசிங்கவிடமிருந்தும் ஆட்சி கைப்பற்றப்படும் என்றும் எஸ்.எம்.மரிக்கார் குறிப்பிட்டார்.

ஜனநாயகத்தை பாதுகாப்பதாகக் கூறி ஆட்சியைப் பொறுப்பேற்ற அதிபரினாலேயே அதனை மீறுவதற்கும் இடமளிக்க முடியாது. மீண்டுமொரு புரட்சி ஏற்பட்டு முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவைப் போன்றே ரணில் விக்ரமசிங்கவும் துரத்தியடிக்கப்படுவார்.

ஆர்ப்பாட்டங்களை அவர் காவல்துறையைக் கொண்டு முடக்க எண்ணினால் மாவட்டம், கிராமம் என நாடளாவிய ரீதியில் அவற்றை விஸ்தரிப்போம். தேர்தலை நடத்துவதா இல்லையா என்பதை அதிபர் தீர்மானிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலதிக தகவல்களையும் மேலும் பல செய்திகளையும் அறிந்துகொள்ள மாலை நேர செய்திகளுடன் இணைந்துகொள்ளுங்கள்.

 

-tw