இந்தியாவின் அதானி குழுமத்தின் 2காற்றாலை மின் நிலையங்களுக்கு ஒப்புதல் அளித்த இலங்கை முதலீட்டுச் சபை

மன்னார் மற்றும் பூனேரியில் 442 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் அமைக்கப்படவுள்ள இரண்டு காற்றாலை மின் நிலையங்களுக்கு இலங்கை முதலீட்டுச் சபை (BOI) இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்திற்கு ஒப்புதல் கடிதம் வழங்கியுள்ளது.

இந்தத் திட்டம் இரண்டு ஆண்டுகளுக்குள் 350 மெகாவாட் மின்சாரத்தை தேசிய மின் தொகுப்பில் சேர்க்கும் என்று BOI தெரிவித்துள்ளது.

இதனால், மன்னாரில் உள்ள காற்றாலை மின் நிலையம் 250 மெகாவாட் திறனிலும், பூனேரியில் உள்ள காற்றாலை மின் நிலையம் 100 மெகாவாட் திறனிலும் இயங்கும்.

350 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு காற்றாலை மின் நிலையங்கள் இரண்டு ஆண்டுகளில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது, அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்குள் அவை தேசிய மின் தொகுப்பில் சேர்க்கப்படும் என்று BOI குறிப்பிட்டுள்ளது.

மேலும், புதிய திட்டம் 1500-2000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.

பூனேரி மற்றும் மன்னாரில் 500 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தின் முன்னேற்றம் குறித்து இன்று காலை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகத்தில் அதானி குழும அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர ட்வீட் செய்திருந்தார்.

 

 

-if