நெதர்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் இருதரப்பு விமானசேவைகள் ஒப்பந்தம்

இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்தக்கூடியவகையில் நெதர்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் இருதரப்பு விமானசேவைகள் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

நெதர்லாந்தின் ஹேக் நகரில் நெதர்லாந்துக்கான இலங்கைத்தூதுவர் அருணி ரணராஜாவுக்கும் அந்நாட்டின் உட்கட்டமைப்பு அமைச்சின் கீழான சிவில் விமானப்போக்குவரத்துப்பிரிவின் பதில் பணிப்பாளர் நாயகத்துக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை மாத்திரமன்றி, ஐரோப்பிய மற்றும் ஆசியப்பிராந்திய நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதையும் நோக்காகக்கொண்டிருக்கின்றது.

இவ்வொப்பந்தத்தின் ஊடாக இருநாடுகளுக்குச் சொந்தமான விமானங்களும் ஆம்ஸ்டர்டம் மற்றும் கட்டுநாயக்கவுக்கு இடையிலும் அவ்விரு நாடுகளின் எல்லைகளுக்குள்ளும் பறப்பதற்கு வாய்ப்பளிக்கின்றது.

மேலும் சுற்றுலாப்பயணங்கள் மற்றும் வர்த்தகத்துறைசார் பயணங்களுக்கான வாய்ப்புக்கள் இவ்வொப்பந்தத்தின் மூலம் விரிவுபடுத்தப்பட்டிருக்கின்றது. நெதர்லாந்து சுற்றுலாப்பயணிகளைப் பொறுத்தமட்டில் இலங்கை முக்கியமானதோர் சுற்றுலாப்பயணத்தளமாகக் காணப்படுவதுடன் கடந்த 2022 ஆம் ஆண்டின் குறித்த காலப்பகுதியில் பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் இருந்தபோதிலும் இலங்கைக்கு 11,987 நெதர்லாந்துப்பிரஜைகள் வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

-if