இலங்கையின் கடன் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அமைப்பிற்கு G7 நாடுகள் வரவேற்பு

இலங்கையின் கடன் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அமைப்பிற்கு G7 நாடுகள் அழைப்பு விடுத்துள்ளது.

ஹீரொஸிமா நகரில் வெள்ளிக்கிழமை ஆரம்பமான ஜீ-7 நாடுகளின் தலைவர்களது 49 ஆவது மாநாட்டில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நடுத்தர வருமான நாடுகள்

இலங்கையின் கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைமையின் கீழான நடவடிக்கைக்கு ஜீ-7 நாடுகளின் கூட்டணி வரவேற்பு தெரிவித்துள்ளது.

மேலும் நடுத்தர வருமான நாடுகளுக்கு தீர்வு காண்பதற்கான எதிர்கால பலதரப்பு முயற்சிகளுக்கு ஒரு வெற்றிகரமான முன்மாதிரியாக விரைவான தேர்வு அவசியம் என்றும் G7 நாடுகள் வலியுறுத்தியுள்ளது.

 

 

-tw