உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துமாறு தேசிய மக்கள் சக்தி கடும் அழுத்தம்

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துமாறு அழுத்தம் கொடுக்கும் வகையில் தேசிய மக்கள் சக்தி எதிர்வரும் ஜூன் 8 ஆம் திகதி முதல் போராட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

காலி – பலப்பிட்டியவில் இன்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள், எதிர்வரும் 8 ஆம் திகதியன்று தேர்தல்கள் திணைக்களத்துக்கு முன்னால் போராட்டத்தை நடத்துவர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கம்பஹா, ஹம்பாந்தோட்டை, அனுராதப்புரம் இறுதியாக கொழும்பில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள்

மத்திய வங்கியின் அண்மைய அறிக்கையின் படி, 68 வீதமான மக்கள், தமது உணவுக்கொள்ளளவை குறைத்துள்ளனர். 40 வீதமான நோயாளர்கள், தமது மருந்துகளை நிறுத்தியுள்ளனர்.40 வீதமானவர்கள், தமது கல்விச் செலவுகளை குறைத்துள்ளனர். 5 இலட்சம் பேர் தமது தொழில்களை இழந்துள்ளனர். சுமார் 10 இலட்சத்துக்கு 4 ஆயிரம் நிபுணத்துவம் அற்ற தொழிலாளர்கள், நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்றும் அனுரகுமார தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தேசிய மக்கள் சக்தி, இந்த நாட்டை மக்கள் வாழக்கூடிய நாடாக மாற்றியமைப்பதற்காகவே தமது போராட்டத்தை முன்னெடுக்கின்றது. இதற்கான சவாலை ஏற்கத் தாம் தயாராகியுள்ளதாகவுவும் அனுரகுமார குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதத்துக்குள் கோரப்பட வேண்டும். அத்துடன் உள்ளூராட்சி மற்றும் மாகாணசபை தேர்தல்களும் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

 

 

-tw