PT-06 ரக விமானங்களை இயக்குவதை இலங்கை விமானப்படை இடைநிறுத்திம்

திருகோணமலை சீனன்குடாவில் நேற்று இடம்பெற்ற பயிற்சி விமான விபத்தை அடுத்து, PT-06 ரக அனைத்து விமானங்களையும் இயக்குவதை இலங்கை விமானப்படை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் விமானப்படைத் தளபதி எயார் மார்ஸல் உதேனி ராஜபக்சவினால் விசேட விசாரணைக்குழுவொன்று நேற்று நியமிக்கப்பட்டது.

அக் குழுவின் அறிக்கை கிடைக்கப்பெறும் வரையில் அந்த விமானங்கள் இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை விமானப்படை

இலங்கை விமானப்படையின் PT-06 ரக பயிற்சி விமானம் நேற்று காலை புறப்பட்ட சில நிமிடங்களில் சீனன்குடா விமானப்படையின் கல்லூரி மைதானத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இவ் விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது.

சீனாவின் தயாரிப்பான PT-06 ரக பயிற்சி விமானங்களில் 6 விமானங்களை இலங்கை விமானப்படை 2018 ஆம் ஆண்டு கொள்வனவு செய்வதற்கு இலங்கை தேசிய பாதுகாப்பு சபை அனுமதி வழங்கியது.

இதற்காக 5 மில்லியன் டொலர்களுக்கு அதிகமான நிதி செலவிடப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் குறித்த விமானம் ஒன்று விபத்துக்குள்ளான நிலையில், ஒருவர் உயிரிழந்தார்.

 

 

-jv