இலங்கை செல்கிறார் அணு விஞ்ஞானி அப்துல் கலாம்

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும் பிரபல அணு விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல் கலாம், இலங்கை செல்லவுள்ளதாக இந்திய தூதரக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரி மாதம் 20-ம் தேதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள இவர் மூன்று நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கி இருப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் டாக்டர் அப்துல் கலாம் விசேட உரை நிகழ்த்தவுள்ளதுடன் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள பல்வேறு கலை கலாசார நிகழ்வுகளிலும் அவர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGS: