இலங்கை கிரிக்கெட் சபை நடத்தும் அனைத்து உள்நாட்டு போட்டிகளையும் உடனடியாக நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சரின் மேல்முறையீட்டு ஆலோசனைக் குழுவின் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எழுத்துமூல அறிவுறுத்தல்
இதன்படி இலங்கை கிரிக்கெட் குறித்து விளையாட்டுப் பணிப்பாளர் நாயகம் (2023.08.25)ஆம் திகதி எழுத்துமூல அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதன் அடிப்படையிலே, இலங்கை கிரிக்கெட் சபையால் நடத்தப்படும் அனைத்து உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளையும் நிறுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.
-tw