பங்களாதேஷிடம் பெற்ற முழு கடனையும் செலுத்திய இலங்கை

பங்களாதேஷிடம் இருந்து பெறப்பட்ட கடன் தொகை முழுவதையும் நிதி பரிமாற்ற வசதிக்கு அமைய இலங்கை செலுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

கடந்த வியாழக்கிழமை  அந்நாட்டுக்கு வழங்கப்படவிருந்த எஞ்சிய கடன் தொகையான 50 மில்லியன் டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளன.

இலங்கை மொத்தமாக  பங்களாதேஷிடம் இருந்து 200 மில்லியன் டொலர்களை கடனாக பெற்றிருந்தது.

அத்துடன் அந்த கடனுக்கான வட்டியாக 4.5 மில்லியன் டொலர்களும் செலுத்தப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

 

 

-tw