வங்கிகள் விதிக்கும் வட்டி விகிதத்தை உடனடியாக குறைக்க வேண்டும்

வட்டி விகிதங்கள் மிக விரைவில் குறைக்கப்பட வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர் ஒருவர் குத்தகை வட்டி விகிதங்கள் குறைக்கப்படாமை தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே மக்கள் வாங்கிய கடனுக்காக, வங்கிகள் விதிக்கும் வட்டி விகிதத்தை உடனடியாக குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்கமைய ,இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை நாங்கள் கூறியுள்ளோம். இந்நிலையில் “மத்திய வங்கியானது ஊழியர் சேமலாப நிதியத்தின் பாதுகாவலராக செயற்படுகின்றது.எனினும் பொதுவாக இது மத்திய அரசின் கடமையல்ல எனவும் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம்

மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் குறித்து கருத்து தெரிவித்த மத்திய வங்கி ஆளுநர், இந்தச் செயலியில் ஈடுபட்டுள்ளவர்கள் என்ற வகையில், சர்வதேச நாணய நிதியத்தின் செயல்முறைக்கு சீனாவில் இருந்து மட்டுமல்லாது பிற நாடுகளிலும் இருந்தும் நல்ல ஆதரவு உள்ளது என்று கூறலாம். என்றார்.

இந்தியா, ஜப்பான், பாரிஸ் கிளப் தலைமையிலான அமைப்பு மற்றும் சீனா ஆகியவை மிகவும் நெருக்கமாக இணைந்து செயல்படுகின்றன. எனவே, இந்த நடவடிக்கைகளை மிக விரைவாக முடிக்க முடியும். என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

-tw