உலகளாவிய குழப்பங்களுக்கு மத்தியிலும் இலங்கையின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை

இந்து சமுத்திரம் எந்தவொரு உலக பலவான்களின் தனிப்பட்ட ஆதிக்கத்துக்கு உள்ளாகாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கான பொருளாதார, அரசியல் மற்றும் வெளிநாட்டு தொடர்புகள் உள்ளிட்ட சாத்தியமான கொள்கை அடிப்படையில் விரிவான மூலோபாயத் திட்டமொன்று அவசியனெ அதிபர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

அதனால், உலகளாவிய குழப்பங்களுக்கு மத்தியிலும் இலங்கையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் அதிபர் சுட்டிக்காட்டினார்.

ரத்மலான ஈகல் லேக் சைட் வளாகத்தில் நேற்று (21) நடைபெற்ற இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் இரண்டாவது பாடநெறிக்கான பட்டமளிப்பு நிகழ்விலேயே அதிபர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு, தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் இரண்டாம் பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த முப்படையினர் மற்றும் சிறிலங்கா காவல்துறையின் 36 சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க பட்டம் வழங்கினார்.

அதனையடுத்து தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தினால் வருடாந்தம் வெளியிடப்படும் நூலின் முதற் பிரதி அதிபருக்கு வழங்கி வைக்கப்பட்டதோடு, தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் டீ.ஜீ.எஸ்.செனரத் யாபாவினால் அதிபருக்கு நினைவு பரிசும் வழங்கப்பட்டது.

 

 

-ib