சீனா உட்பட எந்தவொரு நாட்டிலிருந்து வரும் ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக் கப்பலை இலங்கை வரவேற்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் வழங்கிய நேர்காணலொன்றில் வைத்து அவர் இதை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், சீனாவின் யுவான் வாங் 5 மற்றும் ஷி யான் 6 ஆகிய கப்பல்கள் உளவு கப்பல்கள் என கூறுவதற்கு ஆதாரம் இல்லை.
உளவு கப்பல் என்றால் என்ன என்பது பெரிய கேள்விக்குறி. இவை சிவிலியன் கப்பல்கள், ஆனால் சிக்கல்கள் இருந்தால், அவை உளவு கப்பல்களாக இருந்தால், அவற்றை உள்ளே வர அனுமதிக்கமாட்டோம்.
ஆனால் ஏனைய கப்பல்களும் இலங்கைக்கு வருகின்றன என்பதை யாரும் வெளிச்சம் போட்டுக் காட்டவில்லை. ஒவ்வொரு முறை சீன கப்பல் வரும்போதும் எங்களுக்கு அதிக விளம்பரம் கிடைக்கும்.
ஆனால், வேறு நாட்டிலிருந்து கப்பல், ஆய்வுக் கப்பல் வந்தால் புறக்கணிக்கப்படுகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
-tw