பழிவாங்கும் நோக்கில் கிரிக்கெட் நிர்வாகத்தில் இணையமாட்டேன் – ரொசான் மஹாநாம

பழிவாங்கும் நோக்கில் ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தில் இணைந்துக்கொள்ளப்போவதில்லை என முன்னாள் வீரர் ரொசான் மஹாநாம தெரிவித்துள்ளார்.

தாம் எதிர்பார்க்கும் வகையில் செயற்பட முடியாவிட்டால் கிரிக்கெட் நிர்வாகத்தில் இணைவதில் பயனில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக சில அமைச்சர்கள் கிரிக்கெட் நிர்வாகத்தில் இணைந்துக்கொள்ளுமாறு தமக்கு அழைப்பு விடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒரே விதமான சிந்தனையுடைய தரப்பு ஒன்றுடன் இணைந்து செயற்படவே தாம் விரும்புவதாகவும், எனினும் பழிவாங்கும் நோக்கில் தாம் இணைந்துக்கொள்ளப்போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய திட்டமொன்றின் அடிப்படையில் செயற்படாவிட்டால் நாட்டின் விளையாட்டுத்துறையை கட்டியெழுப்ப முடியாது எனவும் ரொசான் மஹானாம தெரிவித்துள்ளார்.

 

 

 

-tw