பாலியல் வன்முறையைத் தடுக்க குழந்தைகளே புகார் செய்ய தகுந்த வழிமுறையை அரசாங்கம் உருவாக்கும்

கடந்த 6 ஆண்டுகளில் பாலியியல் வன்முறை  அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, சிறார்களை உள்ளடக்கிய  வழிமுறையை அரசாங்கம் உருவாக்கும்.

சட்டம் மற்றும் கல்வி அமைச்சர்களின் கூட்டு அறிக்கையின்படி, 2017 முதல் 2023 வரை 6,990 குழந்தைகள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர், 2023 இல் மட்டும் 1,570 பேர் பாதிக்கப்பட்டனர்.

“அரசாங்கம் இன்று எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று, குறைவான புகார்களே குழந்ததைகளால் செய்யப்படுகின்றன, ” என்று அஸலினா ஓத்மன் சயிட் மற்றும் பட்லினா சிடெக்  கூறியுள்ளனர்.

துஷ்பிரயோகம் தொடர்பான அனைத்து புகார்களும் மிகவும் திறம்பட  இருக்க கல்வி அமைச்சகம் மற்றும் அஸலினாவின் அலுவலகம் இணைந்து குழந்தைகளுக்கு நட்பு அறிக்கையிடல் அமைப்பு உருவாக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

“பள்ளிகளில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை திறம்பட கண்டறிந்து புகாரளிக்க ஆசிரியர்கள் மற்றும் சமூகத் தலைவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும்”.

அமைச்சர்கள் வழங்கிய புள்ளிவிவரங்களின்படி, 2023 ஆம் ஆண்டில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட 1,570 பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பெரும்பாலானவை 13 முதல் 15 வயதுக்குட்பட்டவை, 110 வழக்குகள் ஆறு வயதுக்குட்பட்டவை.

-fmt