ரிங்கிட் வீழ்ச்சிக்கு எதிர்கட்சியும் காரணம் – முன்னாள் அமைச்சர்

ரிங்கிட் மதிப்பு வீழ்ச்சி மற்றும் பொருளாதாரத்தின் தற்போதைய நிலைக்கு எதிர்க்கட்சிகளும் காரணம்  என்று சலே சைட் கெருக் கூறினார்.

இந்த முன்னாள் அமைச்சரின் கூற்றுப்படி, எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை கவிழ்ப்பது பற்றி தொடர்ந்து பேசி வருவதால், நாட்டின் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை குலைத்தது.

“அரசியல் ஸ்திரத்தன்மை ஒரு நாட்டின் மீது வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்கு முக்கியமாகும்.

“தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க அல்லது மாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வெளிநாட்டு பத்திரிகைகளிடம் பேசினால், அது நாட்டைப் பற்றி எதிர்மறையான படத்தை வரைந்துவிடும், இது வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும் மற்றும் நாட்டிற்குள் வெளிநாட்டு முதலீடுகளைத் தடுக்கும்.” சல்லே இன்று பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.