பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு : 35 பேர் பலி!

வடகிழக்கு பாகிஸ்தானில் உள்ள பழங்குடியினர் சந்தை தொகுதியொன்றில் குண்டு வெடித்ததில் 35 பேர்ம பலியாகினர், 11 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது மற்றும் 60 பேர் காயமைடந்துள்ளனர்.

பாகிஸ்தானின் வடகிழக்கில் அமைந்துள்ள கைபர் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ளது ஜம்ருத் சந்தை. அங்கு எப்பொழுதுமே மக்கள் நடமாட்டம் அதிகமாக  இருக்கும். பாகிஸ்தானின் வடகிழக்கு பகுதி தாலிபான்கள் மற்றும் அல்-கொய்தா தீவிரவாதிகள் அதிகம் உள்ள இடம். இங்குள்ள ஒரு சந்தைப் பகுதியில் நேற்று சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்து.

நேற்று அந்த சந்தையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனமொன்றில் இருந்த குண்டு வெடித்ததில் 35 பேர் பலியாகினர், பலர் காயம் அடைந்தனர்.

பயணிகள் வேன் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டு தொலை இயக்கி மூலம் வெடிக்க வைக்கப்பட்டது என செய்திகள் வெளியாகின. குண்டு வெடித்த வாகனத்தில் இருந்த அனைவரும் இறந்துவிட்டதாக இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.